கண்டி சிட்டி ஜம்மியத்துல் உலமாவின் மூத்த ஆலிமும் முன்னாள் உப தலைவருமான அஷ்ஷெய்க்ய்க் ஏ.சீ.எம். சதகத்துல்லாஹ் நத்வி புதன் இரவு 11.15 அளவில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என கண்டி, மஸ்ஜித் சம்மேளன தலைவர் சித்தீக் தெரிவித்துள்ளார்.
திகன வன்முறையின் போது தாக்குதலுக்குள்ளான நிலையில் அவர் வைத்தியசாலையில் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்தமையும் இன்று மரணத்தைத் தழுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக.
பிந்திய செய்தி: ஜனாஸா நல்லடக்கம், வியாழக்கிழமை கண்டி கட்டுகல பள்ளிவாசலில் ளுஹர் தொழுகையையடுத்து இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்திய செய்தி: ஜனாஸா நல்லடக்கம், வியாழக்கிழமை கண்டி கட்டுகல பள்ளிவாசலில் ளுஹர் தொழுகையையடுத்து இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment