
மாவனல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதம் குறித்து பிரதேச மக்கள் மத்தியில் சலிப்பு நிலை காணப்படுகின்ற அதேவேளை இனவாத வன்முறைகள் இடம்பெற்றுவிடாத வண்ணம் பொலிசாரோடும் பிதேச முக்கியஸ்தர்களுடனும் தாம் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கின்றனர் முஸ்லிம் அரசியல்வாதிகள்.
ஏலவே மாவனல்லை பகுதியில் ஒரு சில இளைஞர்கள் மற்றும் அதிகாலையில் கைது செய்யப்பட்ட நபரின் நெருங்கிய வட்டாரங்கள் தொடர்பில் பொலிசார் விசாரணை நடாத்தியுள்ள அதேவேளை, கடும்போக்குவாதிகள் மாவனல்லை செல்ல மேற்கொண்ட முயற்சிகள் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பில் நாம் தொடர்பு கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் தாம் பொலிசாருடன் தொடர்பில் இருப்பதாகவும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். பிரதேசத்தில் ஏலவே விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் சமூக மட்டத்தில் ஓரளவு குழப்பமும் அதிர்ச்சியும் நிலவுவதைக் காணமுடிகிறது.
புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் கைதான நபர் பற்றியும் பல்வேறு நிலைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை இன்று மதியம் நீண்ட நேரமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் அரசியல்வாதிகளின் கோரிக்கையையடுத்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கபீர் ஹாஷிம் இவ்விடயத்தில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் அதேவேளை கொழும்பு அரசியல் தலைமைகளும் இவ்விடயத்தில் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment