ஞானசாரவை விடுவிக்கக் கோரி பாதயாத்திரை: மேர்வினும் பங்கேற்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 4 October 2018

ஞானசாரவை விடுவிக்கக் கோரி பாதயாத்திரை: மேர்வினும் பங்கேற்பு!


நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் ஆறு வருடங்களில் நிறைவடையும் வகையிலான கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் ஞானசாரவை விடுவிக்கக் கோரி இன்று அவரது ஆதரவாளர்களால் பாத யாத்திரை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.களனியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தன்னை பௌத்த தலைவராக சித்தரிக்க முயன்று வரும் மேர்வின் சில்வாவும் கலந்து கொண்டுள்ளார்.


இராணுவ வீரர்களுக்காக பேசச் சென்றதே ஞானசார செய்த குற்றம் எனவும் பௌத்த துறவிகளை மௌனிக்கச் செய்ய முயற்சிக்க வேண்டாம் எனவும் கோசங்களும் எழுப்பப்பட்டிருந்த அதேவேளை ஞானசாரவை திட்டமிட்டு சிறைப்படுத்தி விட்டதாகவும் கடும்போக்காளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment