பேருவளை துப்பாக்கிச் சூடு: பத்துப் பேர் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 4 October 2018

பேருவளை துப்பாக்கிச் சூடு: பத்துப் பேர் கைது!நேற்றிரவு, பேருவளை, பன்னில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபரை வழி மறித்து இத்துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சம்பவத்தில் காயமுற்ற 26 வயது நபரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலிருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிச் சூடு நடாத்திய இருவரும் அடக்கம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment