இலங்கையில் ஏழைகளுக்கு வீடு: UK இலங்கைப் பள்ளிவாசலின் முன்மாதிரி! - sonakar.com

Post Top Ad

Sunday 23 September 2018

இலங்கையில் ஏழைகளுக்கு வீடு: UK இலங்கைப் பள்ளிவாசலின் முன்மாதிரி!


இலங்கையில் ஏழைகளுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் நிதா  பவுன்டேசனின் திட்டமொன்றுக்கு இங்கிலாந்து, ஸ்லவ் (Slough) பகுதியில் சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் இயங்கி வரும் மஸ்ஜிதுல் ஜன்னா கை கொடுக்க முன் வந்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் குறித்த நிறுவனத்தினால் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு 10 வீடுகளை நிர்மாணிக்க இலங்கையர்களின் நிர்வாகத்தின் கீழான மஸ்ஜிதுல் ஜன்னா கை கொடுக்கவுள்ளதுடன் அதற்கமைவாக  பள்ளிவாசல் நிர்வாக முக்கியஸ்தர்கள் அனீஸ், உசைர் மற்றும் ரியாஸ் நேரடியாக கொழும்பு சென்று  இதற்கான நிகழ்வில் பங்கேற்று உறுதி மொழியை வழங்கியுள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தில் சிறப்பான கட்டமைப்புடன் இயங்கி வரும் மஸ்ஜிதுல் ஜன்னா, பிரதேச மக்கள் மற்றும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கும் பயனுள்ள நல்ல நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் சமூக நலன்புரி பணிகளையும் செய்து வருகிறது. இந்நிலையில், பள்ளிவாசல் நிர்வாகம் தமது ஜமாத்தார் ஊடாக இலங்கையில் இவ்வாறான பயனுள்ள திட்டமொன்றுக்கு கை கொடுக்க முன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment