தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சர்ச்சையில் ஐ.தே.க MP! - sonakar.com

Post Top Ad

Wednesday 12 September 2018

தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டிய சர்ச்சையில் ஐ.தே.க MP!


ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தனது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக பொலிசில் முறையிட்டுள்ளார் முன்னாள் பஸ்பாகே பிரதேச தலைவர் எம்.எஸ். ரத்னசிறி.மஹிந்தானந்த அளுத்கமகேயின் சகோதரரான ஆனந்த, தனது மனைவி பிள்ளையின் முன் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி அளுத்கமகே குடும்பம் மாத்திரமே நாவலபிட்டியில் அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் யார் குறுக்கே வந்தாலும் அழித்துவிடப் போவதாகவும் தெரிவித்ததாக முறையிடப்பட்டுள்ளது.

நாவலபிட்டிய நகர சபை அதிகாரப் போட்டியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment