மேல் மாகாண சபைக்கு விலையுயர்ந்த கதிரைகள் இல்லை! - sonakar.com

Post Top Ad

Wednesday 12 September 2018

மேல் மாகாண சபைக்கு விலையுயர்ந்த கதிரைகள் இல்லை!


தலா 644,000 பெறுமதி குறிப்பிடப்பட்டு மேல் மாகாண சபைக்கு  நாற்காலிகளை இறக்குமதி செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



ஜே.வி.பி உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து இவ்விவகாரம் பேசு பொருளானதோடு ஆளுனரின் தலையீட்டில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை நடாத்தப்பட்டிருந்தது.

தற்போது, முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் நாற்காலி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் ஏற்படும் இழப்புகளை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தே பெறப்போவதாக அரச தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment