
நேற்றைய ஜனபலய ஆர்ப்பாட்டத்தினால் பொது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய அசௌகரியங்களுக்குத் தாம் மன்னிப்புக் கோருவதாக தெரிவிக்கிறார் நாமல் ராஜபக்ச.
மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் மக்களுக்காகவே போராட்டம் நடாத்துவதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்களுக்காக அதைப் பெற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்தும் போராடப் போவதாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தனக்கெதிரான வழக்குகளை திசை மாற்ற நீதித்துறைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தவே நாமல் ஜனபலய மூலம் முயற்சி செய்ததாக மங்கள சமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment