
கொழும்பு, தெமட்டகொட பகுதியில் நின்ஜா குழு என அறியப்பட்ட பிரபல பாதாள உலக கோஷ்டியின் முக்கிய நபர் சூட்டா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் அங்கொட லொக்காவின் சகாவான சூட்டா பல்வேறு குற்றச்செயல்களின் பின்னணியில் தேடப்பட்டு வந்த அதேவேளை கைதாகும் போது இயந்திரத் துப்பாக்கியொன்றை வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துகோறள கங்கானம்கே சந்துன் பிரியதர்சன எனும் இயற்பெயர் கொண்ட நபரே சூட்டா என புனைப்பெயரால் அறியப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment