இம்ரான் கான் அமீரகம் விஜயம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 20 September 2018

இம்ரான் கான் அமீரகம் விஜயம்!


பாகிஸ்தானின் பிரதமராகப் பதவியேற்றுள்ள முன்னாள் கிரிக்கட் நட்சத்திரம் இம்ரான் கான், தனது முதலாவது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு மத்திய கிழக்கு சென்றுள்ளார்.சவுதி அரேபியாவில் அந்நாட்டின் மன்னரோடு விருந்தில் கலந்து கொண்டிருந்த இம்ரான், பின் அமீரகத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.

பிராந்திய மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment