கோத்தாவின் பாதுகாப்பு: தினசரி செலவு ரூ. 35 லட்சம்! - sonakar.com

Post Top Ad

Friday 28 September 2018

கோத்தாவின் பாதுகாப்பு: தினசரி செலவு ரூ. 35 லட்சம்!


முன்னாள் பாதுபாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அரசாங்கம் தினசரி ரூ. 35 லட்ச ரூபா செலவிடுவதாக தகவல் வெளியிட்டுள்ளார் பிரதியமைச்சர் நலின் பண்டார.42 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 28 இராணுவத்தினர் உட்பட்ட 70 பேர் கொண்ட பாதுகாப்பு அணி கோத்தபாயவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ள அவர் சரத் பொன்சேகாவுக்கு 20 பேர் கொண்ட பாதுகாப்பு அணியே வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில் மஹிந்த ராஜபக்ச, தனது பாதுகாப்பை இரட்டிப்பாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment