ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதராக Dr. தயான் ஜயதிலக, ஐ.தே.க - ஐ.ம.சு.கூ ஆதரவில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
அரசாங்கத்தை விமர்சிக்கக்கூடிய நபராக இருப்பினும் அவருக்குத் தூதர் பதவியை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.
எனினும், ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் போது ஆட்சேபித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment