மரண தண்டனை பட்டியலின் முதல் ஐவர் பாகிஸ்தானியர்: மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Thursday 23 August 2018

மரண தண்டனை பட்டியலின் முதல் ஐவர் பாகிஸ்தானியர்: மைத்ரி!


இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு சிறைப்படுத்தப்பட்டும் தொடர்ந்தும் அதனைக் கைவிடாது மரண தண்டனைக்குத் தகுதி பெற்றிருப்போர் பட்டியல் தனது கைக்குக் கிடைத்திருப்பதாகவும் அதில் முதல் ஐவர் பாகிஸ்தானியர் எனவும் தகவல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.இவ்வாறானவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் தான் தயங்கப் போவதில்லையெனவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் மேலும் தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தானியர்களை அவர்களது நாட்டிற்கு நாடு கடத்தி மரண தண்டனையை அங்கு நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பட்டியலில் அதிகமானோர் பெண்கள் எனவும் தெரிவிக்கின்ற மைத்ரி, அடுத்த தலைமுறையினரின் நன்மை கருதி கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்வதாகவும் மரண தண்டனை வழங்குதல் தொடர்பான இறுதி முடிவு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment