யாழ் குடாநாட்டில் வாழைப்பழ விலை அதிகரிப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 August 2018

யாழ் குடாநாட்டில் வாழைப்பழ விலை அதிகரிப்பு


யாழ் குடாநாட்டில் கோயில் தினங்கள்   பெருநாள் தினத்தை முன்னிட்டு  வாழைப்பழங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டின் முக்கிய சந்தைகளான  திருநெல்வேலி மருதனார்மடம் உள்ளிட்ட  பொதுச்சந்தையில் இன்றைய(22) விலை நிலைவரப்படி ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 110 ரூபாவும்  இதரை வாழைப்பழம் 130 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.


 தற்போதைய காலநிலை  பழ வகைகளின் சீசன் குடாநாட்டில் நிறைவுபெற்றுள்ளமையே இவ்விலை உயர்வுக்குக்   காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குடாநாட்டின் பிரசித்தி பெற்ற ஆலயங்களான நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் வடமராட்சி ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயம் உட்படப் பல ஆலயங்களின் வருடாந்த மஹோற்சவங்கள் ஆரம்பமாகி உள்ளதனால்   வாழைப்பழங்களின்  விலை மேலும் அதிகரித்துள்ளதாக  வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment