ட்ரம்பின் எதிர் நடவடிக்கை: பொருளாதார சிக்கலில் துருக்கி! - sonakar.com

Post Top Ad

Saturday 11 August 2018

ட்ரம்பின் எதிர் நடவடிக்கை: பொருளாதார சிக்கலில் துருக்கி!


அமெரிக்க மதகுரு ஒருவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் துருக்கியில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்க மறுக்கும் துருக்கிக்கு எதிராக மேலதிக பொருளதார அழுத்தத்தை அறிவித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.



உலக பொருளாதாரத்தை நிலை குலையச் செய்து வரும் ட்ரம்ப், ஐரோப்பிய யூனியன் நாடுகளின் இரும்பு இறக்குமதிகளுக்கும் புதிய கட்டணங்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினிய தயாரிப்புகளுக்கு எதிரான கட்டணங்களை இரட்டிப்பாக்கியுள்ளதன் மூலம் துருக்கியின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வர்த்தகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார்.

அவ்வப்போது உள்நாட்டில் தனது ஆதரவாளர்களைத் திருப்திப் படுத்த சில கோசங்களை வெளியிட்டு வருகின்ற போதிலும் அர்துகான் நிர்வாகம் அமெரிக்காவுடன் சமரசத்துக்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் துருக்கி நாணய பெறுமதியும் நேற்றைய தினம் 20 வீத வீழ்ச்சியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment