முச்சக்கர வண்டியில் பயணிகளை ஏற்றிச் செல்ல 'வயதுக் கட்டுப்பாடு'! - sonakar.com

Post Top Ad

Saturday, 11 August 2018

முச்சக்கர வண்டியில் பயணிகளை ஏற்றிச் செல்ல 'வயதுக் கட்டுப்பாடு'!


பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வாடகை முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான புதிய வயதெல்லை மற்றும் நிபந்தனைகளை அறிவித்துள்ளது போக்குவரத்து அமைச்சு.இதனடிப்படையில் ஆகக்குறைந்தது 35 வயது நிரம்பிய ஒருவரே இவ்வாறு அனுமதிப்பத்திரம் பெறமுடியும் என்பதோடு 70 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும் எனவும், முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப் பத்திரம் பெற்று இரு வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மருத்துவ சான்றிதழ், குற்றச் செயல்களில் தொடர்பில்லாமைக்கான நற்சான்றிதழ் போன்ற அடிப்படைத் தகைமைகளைக் கொண்டவர்களுக்கே அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment