நாளை துல் ஹஜ் மாதம் ஆரம்பம்; 21ம் திகதி பெருநாள்: சவுதி! - sonakar.com

Post Top Ad

Saturday 11 August 2018

நாளை துல் ஹஜ் மாதம் ஆரம்பம்; 21ம் திகதி பெருநாள்: சவுதி!


ஓகஸ்ட் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை துல்ஹஜ் மாதம் ஆரம்பமாவதாக அறிவித்துள்ளது சவுதி அரேபியா.சனிக்கிழமை 11ம் திகதியுடன் துல் கஃதா 29 தினங்களுடன் நிறைவு பெற்றுள்ளதுடன் நாளை துல் ஹஜ் மாதம் ஆரம்பமாவதாக விளக்கமளிக்கப்பட்டுள்து.

இதன் பின்னணியில் ஓகஸ்ட் 20ம் திகதி அரபாவுடைய தினம் இடம்பெறுவதுடன் 21ம் திகதி ஈகைத் திருநாள் (ஈதுல் அழ்ஹா) கொண்டாடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment