
File photo
ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் குறுகிய காலத்துக்கு எதிர்பார்க்கப்படும் இப்பொது மன்னிப்பின் போது மேலதிக கட்டணம் எதுவுமின்றி விசாவைப் புதுப்பித்துக் கொள்ள அல்லது நாட்டை விட்டு வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தூதரகம் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment