
அன்று வெள்ளையர்களிடமே நேரடியாக பேசி தமிழர் தரப்பு சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளத் தவறியதனாலேயே இன்றும் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் வட மாகாண முதல்வர் சி.வி. விக்ணேஸ்வரன்.
டி.எஸ். சேனாநாயக்க - பொன்னம்பலம் அருணாச்சலத்தை ஏமாற்றினார், அது போன்று தமிழ் மக்கள் இப்போது நல்லாட்சியை நம்பி ஏமாந்து விட்டதாகவும் வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் சட்டக் கல்லுாாி தமிழ் மாணவர்களின் கலை விழா நிகழ்வில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, வட-கிழக்கை இணைத்து சமஷ்டி ஆட்சியை அறிமுகப்படுத்துவதே ஒரே தீர்வு எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-அஷ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment