அமித் வீரசிங்க குழுவின் விளக்கமறியல் நீடிப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 21 July 2018

அமித் வீரசிங்க குழுவின் விளக்கமறியல் நீடிப்பு!


கண்டி, திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறையை வழி நடாத்திய இனவாதி அமித் வீரசிங்க உட்பட சகாக்கள் எண்மரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.


மஹசோன் பலகாய எனும் அமைப்புக்கு பகிரங்கமாக அலுவலகம் வைத்து நடாத்தி வந்த அமித், தான் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிசார் இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

இந்நிலையில், தெல்தெனிய நீதிமன்றம் குறித்த நபர்களது விளக்கமறியலை ஓகஸ்ட் 03ம் திகதி வரை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment