மாகாண சபை தேர்தல் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி! - sonakar.com

Post Top Ad

Saturday 21 July 2018

மாகாண சபை தேர்தல் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி!


இவ்வருட இறுதி அல்லது எதிர்வரும் ஜனவரி 5ம் திகதிக்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும் தேர்தல் முறைமை தொடர்பில் கட்சித் தலைவர்கள் மத்தியில் தொடர்ந்தும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.


இதன் பின்னணியில் எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.

மாகாண சபைகள் அமைச்சர் புதிய 'கலப்பு' முறைமையே நாட்டுக்கு நல்லதென அபிப்பிராயம் கொண்டிருக்கும் நிலையில் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பல கட்சிகள் பழைய முறைமையை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment