அவுஸ்திரேலியாவில் பிடிபட்ட ராட்சத முதலை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 July 2018

அவுஸ்திரேலியாவில் பிடிபட்ட ராட்சத முதலை!


கடந்த பத்து வருடங்களாகக் குறி வைத்திருந்த சுமார் 1300 இறாத்தல் (589 கி.கி) எடை கொண்ட ராட்சத முதலையொன்றை பிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது அவுஸ்திரேலிய வன இலாகா திணைக்களம்.


15 அடி நீளமான குறித்த முதலைக்கு 60 வயது என தெரிவிக்கப்படுவதுடன் பாரிய எடையுள்ள குறித்த முதலையினால் பொது மக்களுக்கு ஆபத்து என்பதால் அதனை வேறு இடத்துக்கு நகர்த்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வகை உவர் நீர் முதலைகள் சராசரியாக 70 வருடங்கள் உயிர் வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment