இலக்காகும் கிழக்கு: தேர்தல் பார்வை! - sonakar.com

Post Top Ad

Saturday 28 July 2018

இலக்காகும் கிழக்கு: தேர்தல் பார்வை!


இலங்கையின் சமகால நாட்கள் பல்வேறு பேசுபொருள்களுடன் நகர்ந்து செல்கின்றன. தென்னிலங்கையில் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பட்டாங்கள், ஆசிரிய, அரச வைத்;தியர் சங்கம் உட்பட தொழில்சங்கங்கள் முன்னெடுக்கின்ற மற்றும் முன்னெடுக்கத்திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புபபுக்கள்;, கிழக்கில் இடம்பெறும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள்;, வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நிலமீட்டுப் போராட்டங்கள், காணமல் போன அல்லது காணமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத்தாருங்கள் எனக் கண்ணீர்விட்டழுது நடந்தேறுகின்ற போராட்டங்கள் என்பன பாதிக்கப்பட்ட தரப்புகளின் மத்தியிலிருந்து எழுகின்ற உணர்வுகளின் அதிர்வுகளாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.



இந்நிலையில், தற்கொலைகள், சிறுவர் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள், கொள்ளை, கொலை என்ற குற்றச்செயல்கள், போதைப்பொருள் வர்த்தகம், விபத்துக்களினால் வீணாகப் பலியாகும் உயிர்கள், வழிதவறும் இளைஞர்களின் வன்முறை நடவடிக்கைகள் உள்ளிட்ட சகித்துக்கொள்ள முடியாத சம்பவங்களளும் இடம்பெற்றுவருவதையும் அவதானிக்க முடிகிறது.  

இதனிடையே, இக்கூட்டாச்சிக்கெதிராக கூட்டு எதிரணியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இதில், சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை, மத்தள விமான நிலையம் மற்றும் அப்பாந்தோட்டை துறைமுகம் என்பன இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கும் விடயம்,  புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகமாம்கள் குறித்தான வாதப் பிரதிவாதங்கள், மரண தண்டனை வழங்குவது குறித்தாhன கருத்து முரண்பாடுகள் என்பன  தென்னிலங்கை அரசியலை சூடாக்கி வருகின்றன. 

அவற்றுடன், வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கிடையிலும் உட்கட்சிப்பூசல்களும், வாதப்பிரதிவாதங்களும் வெட்டுக்குத்துக்களும், கட்சித் தலைமைகளின் நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களும், தத்தமது கட்சிகளின் செல்வாக்குகளை நிலைநிறுத்தும் அரசியல் நகர்வுகளும் இடம்பெற்று வருகின்ற சூழலில் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விடயம் நாளாந்த ஊடகச் செய்திகளில் முக்கியத்துவமிக்கதாகக் காணப்படுகின்றது.

பதவிக்காலம்  நிறைவடைந்துள்ள கிழக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கும் மற்றும் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட  6 மாகாண சபைகளுக்கான தேர்தல் பழைய முறையிலாக அல்லது புதிய முறையிலா நடாத்தப்படும் என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இக்கட்டுரை எழுதும்; நிமிடம் வரை  கட்சித் தலைமைகளுக்கிடையில் எட்டப்பட்டதற்கான எத்தகவல்களும் அறியப்படவில்லை.

தேர்தல் முறைமையும் கட்சிகளின் நிலைப்பாடும்

இவ்வாறான சர்ந்தர்ப்பத்தில், 'மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடாத்துவதையே தாங்கள் விரும்புவதாகவும், எந்த முறையில் நடத்தப்பட்டாலும் எமக்கு வெற்றி நிச்சயம். ஆனால், பழை முறையே சிறந்தது' என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்த்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். 

இதேசமயத்தில், 'மாகாண சபைத் தேர்தல் பழைய தேர்தல் முறைமையின் நிமித்தம் உடன் நடாத்தப்பட வேண்டுமென' கடந்த புதன் கிழமை பிரதமர் ரணில் விக்கரமசிங்க  தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில்தான,; மாகாண சபைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா புதிய முறைமையிலேயே தேர்தல் நடாத்தப்படும் அல்லது நடதாப்பட வேண்டும் என்ற விடயாப்பிடியான தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்து வரும் நிலையில் இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடா அல்லது ஜனாதிபதியின் நிலைப்பாடா என்பது குறித்த கேள்விகள் அரசியல் களங்கத்தின் பேசுபொருளாகவுள்ளது, புதிய தேர்தல் முறைமையை ஏற்க முடியாது பழைய முறையிலேயே தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என தமிழ் மற்றும் முஸ்லிம் சிறூன்மைக் கட்சித் தலைமைகள் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும்,  கடந்த 20ஆம் திகதி வெள்ளிக் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம்; 23ஆம் திகதி அல்லது ஜனவரி 5ஆம் திகதி மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் மாகான சபை உருவாக்கப்பட்டது எதற்காக? அதன் வரலாற்றுப் பின்னணி இச்சபை உருவாக்கப்பட்டதன் இலக்கை அடைந்துள்ளதா? நடைபெறவுள்ள தேர்தலில் மக்களின் தீர்;ப்பு எத்தகைதாக இருக்கும் ஏன்ற கேள்விகளும் அரசியல் களத்தில் காணப்படுகிறது..

வரலாற்றில் மாகாண சபை
இந்நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்; கொடுக்கும் நோக்குடன் இந்திய அரசின் அழுத்தத்தின் விளைவாக 1987ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவுக்கும் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்;; வாயிலாக உருவாக்கப்பட்டதே மாகாண ஆட்சி முறைமையாகும்.

1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு, இணைந்த வட கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றது.  இணைந்த வட-கிழக்கு மாகாண சபையில் தமிழர் தரப்பு ஆளும் கட்சி வரிசையிலும,; முஸ்லிம் தரப்பு எதிர் கட்சி வரிசையிலும் அமர்ந்து ஆட்சி மேற்கொண்ட போதிலும் அவ்வாட்சி நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கவில்லை.

1990களில் இலங்கையின் வடக்கு கிழக்கிலிருந்து இந்திய அமைதி காக்கும் படை வெளியேற ஆயத்தமான நிலையில், இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின்; முதலமைச்சராகவிருந்த வரதராஜபெருமாள் தன்னிச்சiயாக ஈழப் பிரகடனத்தை மேற்கொண்ட போது, அப்போதைய ஜனாதிபதி மறைந்த ரனசிங்க பிரமதேசாவினால் இணைந்த வட- கிழக்கு மாகாண சபை கலைக்கபபட்டது.

வட-கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட நாள் முதல் இம்மாகாணங்களுக்கான முறையான தேர்தல் நடைபெறும் வரை  வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆட்சி அதிகாரங்கள் ஆளுனர்களின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வந்தது.  வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் எழுந்த பல எதிர்ப்புக் கோஷங்கள் நீதிமன்றம் வரை சென்றதன் விளைவாக 2006ஆம் ஆண்டு வடக்கு - கிழக்கு இணைப்பானது சட்ட விரோதமானது என நீதி மன்றம் வழங்கி தீர்ப்வையடுத்து 2007ஆம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் இணைந்த வட-கிழக்கு மாகாணங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.

எந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த மாகாண ஆட்சி அதிகார முறைமை உருவாக்கப்பட்டதோ அந்த இரு மாகாணத்தின் மக்களாலும் அவ்வாட்சி அதிகாரங்களை ஜனநாயக ரீதியில் அனுபவிக்க முடியாமல் போனது துரஷ்டவசமே.

17 வருடங்களின் பின்னர் 2008ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட கிழக்கிற்கான தேர்தலும் 2013ல்; வடக்கிற்கான தேர்தலும் நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை கிழக்கு மாகாணத்தின் ஆட்சி கடந்த மத்திய ஆட்சியாளர்களின் ஜனநாயகம்; போர்த்திய சர்வதிகார ஆட்சியின் நிழலாகக் காணப்பட்டதாகவே அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.  

இந்த ஆட்சியில் இரு மாகாணங்களிலும் வாழும் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறியதோ இல்லையோ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகளின் ஆசைகள் நிறைவேறியிருக்கிறது. அவற்றிற்;கு பாசிக்குடாவிலும் பொத்துவில் அருகம்;மையிலும் அமைக்கப்பட்டுளள ஹோட்டல்களும் உல்லாச விடுதிகளும் சான்றாகக் காணப்படுகின்றன என்றும் குறிப்பிடப்படுகின்றன்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலின்; போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தும் அவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால்; உதாசீனம் செய்யப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவித்து வந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியும் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைக்கும் சூழலைத் தோற்றுவித்தது.

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் வெற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தும் அதன் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்ணேஸ்வரன் நியமிக்கப்பட்டும் அம்மாகான சபையினால் பெற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்களித்து வெற்றிபெறச் செய்த அம்மக்களுக்கு உதவ முடியாது கையாலகாத நிலை தொடர்ந்து நிலவுகதாகவே வடக்கின் முலமைச்சர் கூறிவருவதையும் காண முடிகிறது.

மாகாண சபைத் தேர்தலும் தமிழ் பேசும் சமூகமும்

ஏறக்குறைய 10 வருட காலம் நீடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு கடந்த ஜனவரி 8ஆம் திகதி இந்நாட்டில் வாழும் ஏறக்குறைய 60 இலட்சம் மக்களால் முடிவு கட்டப்பட்டது.  இந்த முடிவை மாற்றி அமைப்பதற்கு இனவாதக் கட்சிகளின் கூட்டமைப்பு தற்போது ஒன்றுபட்டு செயற்பட்டுக் கொண்ருப்பதையும், இக்கூட்டமைப்பானது சிங்கள மக்கள் மத்தியில் தற்போதைய அரசினால் வடக்கு, கிழக்கு வாழ் சிறுபான்மை சமூகங்கள் வரப்பிரசாதங்களைப் பெற்றுவருவதாகவும், மீண்டும் பயங்கரவாத அமைப்புக்கள் தலைதூக்கி உள்ளதாகவும் பொய்ப்பிரசாரங்கள் அவர்கள் மொழியில் தொடாந்தும் பரப்பப்படுவதையும் காண முடிகிறது.

' வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் சமஷ்டி ஆட்சி முறையைக் கொண்ட புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அவ்விடயங்களை விரைவுபடுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சர்வதேசமும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவகிறது. இது இந்நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமே தெரிவித்திருப்பதன் மூலம் கூட்டு எதிரினியினரின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளலாம்.

இந்நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்களை மாற்றுக் கண்கொண்டு பார்;த்ததன் விளைவு 3 தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலத்தை ஒரு சுடுகாடாக வடக்கு மற்றும் கிழக்கை மாற்றியிருந்தது என்பதை மறக்க முடியாததுதான். இன்று வரை அதன் வடுக்கள் இன்னும் மண்ணையும், மனங்களையும் விட்டு அகலாது காணப்படுகிறது.  இந்நாட்டில் 9 மாகாணங்கள் உள்ளன.

இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களான தமிழர்களும் ; முஸ்லிம்களும் அதிகளவில் வாழ்கின்றனர். வடக்கு கிழக்கில் பல்லாண்டு காலம் சகோதர வாஞ்சையுடன் ஒன்றரக் கலந்து வாழ்ந்து வந்த தமிழர்களும், முஸ்லிம்களும் பேரினவாதத்தின் தீயிற்குப் பலியாகி, ஒருவரை ஒருவர் சந்தேகக் கண் கொண்டு பார்த்ததையும,; பழகியதையும் பலிவாங்கல்களில ஈடுபட்டதையும் வரலாறுகள் சொல்லித்தான் நிற்கிறது.

கடந்த கால ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகள் சமூக ஒற்றுமையை சீர்குழைப்பதற்கு பின்னணியாக இருந்திருந்தாலும் 2015 ஆட்சி மாற்றத்தின் பின் அதே ஆண்டில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில்; முஸ்லிம் காங்கிரஸுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான விட்டுக்கொடுப்பு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவை பலவீனப்படுத்த நினைத்தவர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் ரீதியான பேரிடியாக கருதப்பட்டது.

இந்நிலையில்தான், மீண்டும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தினங்கள் அறிவிக்கபட்டிருக்கின்றது. இதனால் குறிப்பாக கிழக்கின் ஆட்சி யார்பக்கம் செல்லப்போகிறது. அதற்கான முயற்சிகள் தமிழ், முஸ்லிம்; தரப்பில் எத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகள் தங்களது கட்சிப்பலத்தை கிழக்கில் புடம்போடுவதற்கு எத்தகைய நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதையும் காண முடிகிறது.


கிழக்குத் தேர்தலும் முஸ்லிம் கட்சிகளும்

வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டு  தமது அத்தனை தொடர்பாடல்களையும் முன்னெடுத்து; வாழும்; தமிழர்களும் முஸ்லிகளும் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாது. அதற்கு பூகோல அமைப்பும் இடம்கொடாது என்ற நிலை இருக்கின்ற போதிலும் அவ்வினவுறவை சீர்குழைக்க சிலர்; பதவிகளை தூக்கிப்பிடித்து செயற்பட்டதை கடந்த காலங்களில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடைந்த கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் ஏதோ ஒரு தேர்தல் முறைமையில் நடைபெறப்போகிறது. 7 மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் இலக்கு பெரும்பாலும் கிழக்கை நோக்கியதாகவே அமையுமென்பது தற்போது இரு தரப்புக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் புடம்போடுவதைக் காணக்கூடியதாகவுள்ளன.

'கிழக்கு தமிழர்கள் அனைவரும் தமது கட்சி நலன்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை. கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின்  இருப்பை சமூக, பொருளாதார ரீதியாக பாதுகாக்க வேண்டுமாயின் இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழ் இணைந்து தேர்தல்களில் போட்டியிட வேண்டும். கிழக்குத் தமிழர் ஒன்றியம் அனைவரையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக ஒன்றியத்தின் மாகாண இணைப்பாளர் கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ' நாம் யாராக இருந்தாலும் சமூகம் என்று வரும்போது ஒன்றுமைப்பட வேண்டும். சமூகத்திற்காகப் பேச வேண்டும். கிழக்கில் முஸ்லிம்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது காணிப்பிரச்சினையாகும். கிழக்கில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க எமது கட்சி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக  கிழக்கில் கட்சியின் செல்வாக்கை ஆழமாகப் பதித்துக்கொள்வதற்காக பல்வேறு முனைகளில் முயற்சி மேற்கொண்டுவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அண்மையில் நிந்தவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள  முஸ்லிம் பிரதேசங்களில் தனிக்காட்டு ராஜாவாக அரசியல் புரிந்து வந்த முஸ்லிம் காங்கிர{க்கு தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் வரவும் மக்கள் ஆதரவும் பெரும் தலையிடியாக மாறி வருவதை கடந்த கால தேர்தல் முடிவுகள் தெரியப்படுத்துகின்றன.

அதிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது கட்சியின் செல்வாக்கை அதிகரித்துக்கொள்வதற்காக கிழக்கில் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகள் முஸ்லிம் காங்கிரஸுக்கு பெரும் தலையிடி என்றே கூற வேண்டும். இதனை முஸ்லி;ம் காங்கிரஸின் பிரதிநிதிகளினால்  முன்வைக்கப்பட்டு வருகின்ற கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் மாபெரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில்  பிளாஸ்டிக் வாளிகளையும், மண்;வெட்டிகளையும்  கொடுத்து மக்களை குழப்புவதற்கும், வங்குரோத்து அரசியல் செய்வதற்கும் சில அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருவதாக பிரதி அமைச்சர் பைஸல் காசிம் குறிப்பிட்டிருப்பதானது அமைச்சர் ரிஷாத்தினால் வடக்கு, கிழக்கு வாழ் வறிய மக்களின்  வாழ்வாதார முயற்சிகளுக்காக வழங்கப்பட்டு வரும் உபகரணங்களைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அத்துடன், 'முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருக்கும் அமைச்சுக்களினூடாக எவ்வாறான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இவர்களுக்குத் தெரியுமா, எமது அமைச்சுக்களினூடாக நாம் செய்த செய்து கொண்டிருக்கி;ன்ற ஒரு பணியையாவது இவர்;களால் செய்ய முடியுமா என்ற கேள்வியையும் பிரதி அமைச்;சர் பைசல் காசிம் கேட்டுள்ள நிலையில் இக்கேள்விகளுக்கு மாற்று அரசியல் கட்சியினரை விட கிழக்கு முஸ்லிம்களின் பதில் அவ்வாறு அமையும் என்பதும் கேள்விக்குறியாகும்.

அமைச்சர் ரிஷாத்தினால் இவ்வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள்  வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தியதா அல்லது மக்கள் காங்கிரஸை பலப்டுத்துவதற்கான முயற்சியா என்ற கேள்விகளுக்கு மத்தியில் பிரதி அமைச்சர் அமிர் அலி இவ்வாறு குறிப்பிடுகிறார். ' மக்களுடைய வறுமையைக் குறைக்கும் வகையில் வாழ்வதாதார அபிவிருத்திக்கான உபரணங்கள்  வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் எவரிடமும் கையேந்தாமல் சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும். இந்த முயற்சியை ஏற்படுத்தவதற்கான நடவடிக்கையே அமைச்சர் ரிஷாத்தின் நடவடிக்கையாகும்;' என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், 'முஸ்லிம் மக்களுக்காக குரல்கொடுப்போம் என வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸை சேர்;ந்த  மக்கள் பிரதிநிதிகள் அற்பசொற்ப இலாபங்களுக்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேரினவாதத்திற்கெதிரக குரல் கொடுப்பதில்லை' என முன்னாள் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்திருகிறார்.

இவ்வாறு பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்வைத்து வரும் சந்தர்ப்பத்தில், கடந்த கால தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்த செயற்படுவதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.; ஒரு கட்சி இன்னுமொரு கட்சியின் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் பிரச்சாரங்களுக்காக குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கட்சி ரீதியாக பிரதிநிதித்துவங்களை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்காக எத்தகைய வாக்குறுதிகளை முஸ்லிம் அரசியல் கட்சிகளல்; வழங்கப்படவுள்ளன. 

மக்களை ஏமாற்றுவதற்கான எத்தகைய சாணக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதில் எந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புக்கள்  முஸ்லிம் அரசியல் அவதானிகளிடையே காணப்படுகின்ற நிலையில் 'மாகாண சபைத் தேர்தலை புதிய கலப்பு முறையில் நடத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் கை உயர்த்திய ரவூப் ஹக்கீம் அடங்கலான முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். மக்களுக்காக அல்லாமல் அவர்களின் சட்டைப்பைகளை நிரப்புவதற்காகவே மாகாண சபைத் தேர்தலை புதிய கலப்பு முறையில்  நடத்த வேண்டும் என்ற திருத்தத்திற்கு ஆதரவாக முஸ்லிம் அரசியலல்வாதிகள் பாராளுமன்றத்தில் கை உயர்த்தினார்கள். 

ஆனால், தற்போது சுடலை ஞானம் பெற்றவர்கள் போல பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டுமென நடடிக்கிறார்கள்: என  ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பி;ன் செயலாளர் ஹசன் அலி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய  கலப்பு முறையில்  தேர்தல் நடத்தப்படலாம். ஆனால், எல்லை நிர்ணையத்தில் செய்யப்பட்டுள்ள ஊழல்கள் அகற்றப்பட்டு முஸ்லிம்களின் இருப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவரது நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் கருத்தச் சமர்கள், கட்சிகளுக்கிடையிலான போட்டா போட்டிகள் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில்  மாகாண சபைத்தேர்தலில் கிழக்கை  இலக்காக கொண்டு முன்னெடுக்கவுள்ள அரசியல் நடவடிக்கைகள் முஸ்லிம் உறுப்பினர்களின் பிரநிதி;த்துவத்தைக் குறைக்குமா அல்லது அதிகரிக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

-எம்.எம்.ஏ.ஸமட்

No comments:

Post a Comment