இஸ்ரேலை யூத நாடாகப் பிரகடனப்படுத்தும் சட்டம் நிறைவேற்றம் - sonakar.com

Post Top Ad

Thursday, 19 July 2018

இஸ்ரேலை யூத நாடாகப் பிரகடனப்படுத்தும் சட்டம் நிறைவேற்றம்


இஸ்ரேலை யூதர்களின் நாடாகப் பிரகடனப்படுத்தும் சட்டம் ஆக்கிரமிப்பாளர்களின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதனடிப்படையில் நாட்டின் நலன் கருதி, புதிய குடியேற்றங்களை உருவாக்குதல், எல்லைப் பாதுகாப்பு, விஸ்தரிப்பு போன்றவை தமது தேசத்தின் அடிப்படை நலன்கள் என இஸ்ரேல் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வாழும் 1.8 மில்லியன் பலஸ்தீனர்கள் அந்நியப்படுத்தப்படுவதுடன் எதிர்கால இருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் ஜெருசலத்தை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்ததையடுத்து அவசர அவசரமாக யூத தேசத்தை நிறுவும் பணிகள் இடமபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment