விகாரைக்குள் புகுந்து கொள்ளை; புத்தர் சிலை சேதம்! - sonakar.com

Post Top Ad

Thursday 12 July 2018

விகாரைக்குள் புகுந்து கொள்ளை; புத்தர் சிலை சேதம்!


புத்தள, முலாகிரி ரஜ மகா விகாரைக்குள் புகுந்து அங்கிருந்த புத்தர் சிலையின் தலைப் பகுதியைச் சேதப்படுத்தி விகாரையில் இருந்த பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதில் 30,000 ரூபா பெறுமதியான புராதன பொருட்களை வெல்லவாய பகுதி நகைக் கடையொன்றுக்கு விற்பனை செய்து, 10,000 ரூபா பெறுமதியான மது பானம் கொள்வனவு செய்துள்ள ஒக்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் விகாரையொன்றுக்குள் விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை அங்கிருந்த பிக்குவே கொலை செய்திருந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment