இலங்கைக்கு மூன்றாவது சர்வதேச விமான நிலையம்? - sonakar.com

Post Top Ad

Thursday 12 July 2018

இலங்கைக்கு மூன்றாவது சர்வதேச விமான நிலையம்?


கட்டுநாயக்க, மத்தளயைத் தொடர்ந்து ஹிங்குராகொடயில் மேலும் ஒரு சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்கும் திட்டமடங்கிய அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


திருகோணமலை அபிவிருத்திக்கான திட்டத்திலேயே குறித்த விமான நிலைய நிர்மாணமும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான திட்ட வரைபினை மெகாபொலிஸ் அமைச்சர் சம்பிக்க பிரதமர் ரணிலிடம் ஒப்படைத்துள்ளார்.

2050ல் கிழக்கின் வாயிலாக திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படையிலேயே விமான நிலையமும் முன் மொழியப்பட்டுள்ளதுடன் மஹிந்த ராஜபக்ச அரசில் உருவாக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை விமான நிலையம் கூட்டாட்சியில் நெற்களஞ்சியமாகப் பயன்படுத்தப்பட்டமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment