இன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்! - sonakar.com

Post Top Ad

Friday, 27 July 2018

இன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்!


இந்நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணத்தை இன்றிரவு உலகளாவிய ரீதியில் காணலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.சுமார் 1 மணித்தியாலம் 43 நிமிடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் சந்திர கிரகணத்தின் போது சந்திரன் செந்நிறத்தில் காட்சியளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தில் இன்று 27ம் திகதி இரவு 9 மணி முதல் 10.15 மணி வரையான காலப்பகுதியில் சந்திர கிரகணத்தைக் காணலாம் எனவும் ஆசியா (இலங்கையில் 28ம் திகதி அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரைக்குட்பட்ட காலம்) , மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, ஆபிரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளிலும் முழுமையான சந்திர கிரகணம் காட்சியளிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment