
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலான அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இது விவகாரத்தில் இன்னும் விசாரணைகளை நடாத்திக்கொண்டிருப்பதாக தெரிவிக்கும் நிலையில் நூற்றுக்கு அதிகமானோரின் எழுத்து மூலமான சாட்சியங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் தமது அறிக்கை விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சம்பவத்தின் பின்னணியில் இயங்கிய முக்கிய அரசியல்வாதியான திலும் அமுனுகம இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment