
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்ஸிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் பிரதி அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்ளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (14-05) ஏறாவூர் அல்/அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் சம்மேளனத்தின் தலைவர் M.L.A. வாஜித் மெளலவி தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வின் போது தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்கம்,மற்று ம் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா அவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிட தக்கது.
இந்நிகழ்வில் எறாவூர் நகர சபை உறுப்பினர்கள், பிரதி அமைச்சரின் இனைப்பாளர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களும் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடந்த காலத்தில் மாவட்டத்திலும் நல்லினக்கத்தை ஏற்படுத்துவதற்காக பிரதி அமைச்சர் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு தொடர்பில் சிறப்புரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடதக்கது.
-M.Safras
No comments:
Post a Comment