அக்குறணை பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று (26) இடம்பெற்றிருந்த நிலையில் அங்கு சமூகமளித்திருந்த 12 ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் கருப்புப் பட்டியணிந்து வந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
சபையில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றும் கூட தவிசாளர், உப தவிசாளர் பதவிகளைப் பெற முடியாது போனதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியினர் தற்போதைய தேர்தல் முறைமை நியாயமற்றது எனக் கூறியே இவ்வாறு கருப்புப் பட்டியணிந்து எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எனினும், தேர்தல் முடிந்து தெரிவுகளும் நிறைவுற்றுள்ள நிலையில் சபை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு சபைத்தலைவர் இஸ்திஹார் வேண்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-மொஹொமட் ஆஸிக்
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment