சவுதி: பெண் சாரதிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள திட்டமிடும் UBER! - sonakar.com

Post Top Ad

Thursday 26 April 2018

சவுதி: பெண் சாரதிகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள திட்டமிடும் UBER!சவுதி அரேபியாவில் வாடகைக் கார் வசதியை அதிகம் பயன்படுத்தி வந்தது பெண்களே என தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அங்கு பெண்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பெண் வாடிக்கையாளர் பாரிய அளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.இந்நிலையில், இதற்குப் பகரமாக பெண் சாரதிகளை தமது சேவையில் அதிகமாக இணைத்துக் கொள்வதற்கான விளம்பர முன்னெடுப்புகளையும் Uber மற்றும் கரீம் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

ஆண்களுக்கு போன்று 20 வயது நிரம்பியவர்களாகவும், சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் காப்புறுதி உள்ள பெண்கள் இவ்வாறு இணைந்து கொள்வதற்கு எதுவும் தடையில்லையெனவும் சவுதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment