சிரியாவில் தாக்குதல் நடாத்த UKயும் தயார்! - sonakar.com

Post Top Ad

Friday, 13 April 2018

சிரியாவில் தாக்குதல் நடாத்த UKயும் தயார்!


சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரசாயன தாக்குதலை அடிப்படையாக வைத்து அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல் நடாத்தப் போவதாக ட்ரம்ப் தெரிவித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் கூடிய ஐக்கிய இராச்சிய அமைச்சரவையும் இணைந்து கொள்வதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.ஏலவே பிரான்சும் கூட்டிணையவுள்ளதாக அறிவித்துள்ள அதேவேளை சிரியா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

மேற்குலகத்தின் ஆயுத பரீட்சார்த்தகளமாக மாறியுள்ள சிரியாவில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைகள் தமது நிலைகளிலிருந்து விலகிச் செல்வதோடு பல இடங்களில் சரணடைந்து வருகின்றனர். ரஷ்ய தலையீட்டின் பின்னணியில் உருவான கள மாற்றம் தற்போது சர்வதேச யுத்த பூமியாக சிரியாவை உருவாக்கும் சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment