விஞ்ஞானபூர்வமான முறையில் அமைச்சரவை மாற்றம் இடம்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மெகாபொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
அமைச்சு பொறுப்புகள் முறையற்ற விதத்தில் அமைவதனால் பொது மக்களுக்கு முழுமையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் அரசுக்கும் முறையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த இயலாதுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
புத்தாண்டையடுத்து முழு அளவிலான அமைச்சரவை மாற்றம் நிகழும் என மீண்டும் அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment