நம்பிக்கையில்லா பிரேரணை; O/L சித்தியடையாதவர்களின் 'கிறுக்குத்தனம்': ஹரின் - sonakar.com

Post Top Ad

Wednesday 4 April 2018

நம்பிக்கையில்லா பிரேரணை; O/L சித்தியடையாதவர்களின் 'கிறுக்குத்தனம்': ஹரின்ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தமை நாடாளுமன்றுக்குள் இருக்கும் கூட சித்தியடையாதவர்களின் கிறுக்குத் தனம் என தெரிவித்துள்ளார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.


யார் யாரோ பலி கொடுக்கப்பட்ட இச்சம்பவத்தின் பிரதான நடிகர் மஹிந்த ராஜபக்சவை காணவே இல்லையெனவும், நாமல் பேபி பேசுவதற்குக் கூட சபைக்கு வரவில்லையெனவும் தெரிவித்துள்ள அவர் கோத்தபாயவின் குள்ள நரித்தனம் தோற்றுவிட்டது என தெரிவித்துள்ளார்.

தான் க.பொ.த உயர்தரமும் சித்தியெய்திருப்பதாகவும் தெரிவித்த அவர், நாடாளுமன்றுக்குள் இருக்கும் O/L சித்தியடையாத 92 பேரில் பெரும்பான்மையானோர் எதிர்ப்புறத்திலேயே இருப்பதாகவும் அவர்களே இவ்வாறான கிறுக்குத்தனத்தை செய்வதாகவும்  தெரிவித்ததுடன் இனியும் இவ்வாறான அசிங்கங்களை நாடாளுமன்றில் அனுமதிக்கக் கூடாது என சபாநாயகரிடம் வேண்டுகோளும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment