ரணில் விக்கிரமசிங்கவுக்க எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் சலிப்புடன் கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர்.
ஆகக்குறைந்தது ஏழு வாக்குகளால் தோற்பார் என தெரிவித்த உதய கம்மன்பிலவும் நம்பிக்கையில்லா பிரேரணை முயற்சி தோல்வியடைந்து விட்டதாக கருத்துரைத்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேருடன் இணைந்து பிரேரணையை ஆதரிக்கப் போவதாக தெரிவித்து வந்த ரங்கே பண்டார - வசந்த சேனாநாயக்க அணியும் பகிரங்கமாகவே தாம் கூட்டாட்சியைப் பாதுகாக்க வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாடாளுமன்றில் கூட்டு எதிர்க்கட்சியின் 4-5 பேரை தொடர்ச்சியாக வீற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment