ரதன தேரரின் MP பதவிக்கு ஆபத்து; UNP நடவடிக்கை - sonakar.com

Post Top Ad

Friday, 6 April 2018

ரதன தேரரின் MP பதவிக்கு ஆபத்து; UNP நடவடிக்கை


ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொண்ட அத்துராலியே ரதன தேரர் வாக்கெடுப்பின் போது கலந்து கொள்ளாததன் பின்னணியில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியைப் பறிப்பதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தான் ஒரு பௌத்த துறவியாக நடு நிலை வகிக்கப் போவதாக ரதன தேரர் தெரிவித்திருந்தார். இதேவேளை அரசைக் கடுமையாக விமர்சித்து வந்த, பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜேதாசவும் பிரேரணையை எதிர்த்தே வாக்களித்து தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பாதுகாத்துக் கொண்டார்.

ஆயினும், கட்சி சார்பில் அனைவருக்கும் இது தொடர்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை மீறிய ரதன தேரரை நீக்க வேண்டும் என கட்சி மட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

No comments:

Post a Comment