நம்பிக்கையில்லா பிரேரணையால் ராஜபக்ச குடும்பத்துக்குள் பிளவு: அநுர - sonakar.com

Post Top Ad

Friday 6 April 2018

நம்பிக்கையில்லா பிரேரணையால் ராஜபக்ச குடும்பத்துக்குள் பிளவு: அநுர


நம்பிக்கையில்லா பிரேரணையால் ராஜபக்ச குடும்பம் இரு வேறு அணியாகப் பிளவுற்றிருந்தாக தெரிவித்துள்ளார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.


இது தொடர்பில் விளக்கமளித்துள்ள அவர் கோத்தபாய ராஜபக்ச நம்பிக்கையில்லா பிரேரணையை வெல்வதில் குறியாக இருந்த போதிலும் தமது வழக்குகளை இல்லாதொழிக்க அதிகாரத்தில் உள்ளவர்களுடன் சமரசப் போக்கைக் கையாள்வதே பசில் ராஜபக்சவின் நிலைப்பாடாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இறுதி நேரத்தில் மஹிந்தவும் புதல்வர் நாமல் ராஜபக்சவும் வாக்களிப்பில் கலந்து கொண்டதோடு பிரரேரணையை ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment