பறவை மோதியதால் நிறுத்தப்பட்ட Fly Dubai விமானம் - sonakar.com

Post Top Ad

Monday, 2 April 2018

பறவை மோதியதால் நிறுத்தப்பட்ட Fly Dubai விமானம்இயந்திரத்தில் பறவை மோதிய காரணத்தினால் கட்டுநாயக்கவிலிருந்து மத்தள வழியாக டுபாய் செல்லவிருந்த ப்ளை டுபாய் விமானம் மத்தள விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானத்தின் இடது புற இயந்திரத்தில் பறவை மோதியதன் பின்னணியிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.168 பயணிகளுடன் குறித்த விமானம் டுபாய் செல்ல ஆயத்தமான நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 55 பேர் மத்தளயில் ஏறவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment