அமெரிக்க படைகளின் செலவை கட்டாரே ஈடு செய்ய வேண்டும்: சவுதி - sonakar.com

Post Top Ad

Wednesday 25 April 2018

அமெரிக்க படைகளின் செலவை கட்டாரே ஈடு செய்ய வேண்டும்: சவுதி


சிரியாவில் அமெரிக்க படைகளின் இருப்புக்கான செலவை கட்டாரே ஈடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார் சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் அல் ஜுபைர்.


கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் அகற்றப்படுமானால் அந்நாடு ஒரே வாரத்தில் வீழ்ச்சியடையும் எனவும் தமது பாதுகாப்புக்காகவே கட்டார் அமெரிக்காவை இழுத்துப் பிடித்து வைத்துள்ளது எனவும் தெரிவிக்கின்ற அவர், சிரியாவில் அமெரிக்க படைகளின் இருப்புக்கான செலவையும் கட்டாரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ரஷ்ய தலையீட்டின் பின்னர் அரபு நாடுகள் கிளர்ச்சிக் குழுக்களுக்கான ஆதரவையும் குறைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment