திருமலை: முஸ்லிம் ஆசிரியை அபாயா அணிவதற்கு எதிராக போராட்டம் - sonakar.com

Post Top Ad

Wednesday 25 April 2018

திருமலை: முஸ்லிம் ஆசிரியை அபாயா அணிவதற்கு எதிராக போராட்டம்திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பணியாற்ற இணைந்த முஸ்லிம் ஆசிரியை ஒருவர் அபாயா அணிந்து செல்வதற்கு எதிர்ப்புக் கிளம்பியதன் பின்னணியில் அங்கு சர்ச்சை உருவாகியுள்ளது.

இந்நிலையில், இன்று காலை அங்கு ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்த நிலையில் அதன் போது முஸ்லிம்களின் தமிழ் பேச்சு வழக்கு பற்றியும் ஏளன கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியையின் ஆடை தொடர்பில் உருவான சர்ச்சையையடுத்து அங்கு அவரது கணவர் அதிபருடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளமையும் மாகாண கல்வியமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தீர்வொன்றைக் காண உறுதியளித்துள்ளதன் பின்னணியில் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment