மாணிக்க கல் மீதான வரி அதிகரிப்பை மீள் பரிசீலனை செய்யவேண்டும்: நாமல் - sonakar.com

Post Top Ad

Sunday 22 April 2018

மாணிக்க கல் மீதான வரி அதிகரிப்பை மீள் பரிசீலனை செய்யவேண்டும்: நாமல்



மாணிக்க கல் மீதான வரி அதிகரிப்பை அரசாங்கம் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று, நாம் ஏதாவது சொன்னால், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக கூறுகிறோம் என்ற ரீதியில் பலர் நோக்குவதை அவதானிக்க முடிகிறது. இன்று இலங்கையில் ஏதாவது பிழை இடம்பெறுமாக இருந்தால், அதனை முதலில் தட்டி கேட்பவர்களாக, நாங்கள் தான் உள்ளோம். 

இப்போது மாத்திரமல்ல, எப்போதும் இப்படியே செயற்படும் உறுதியிலும் உள்ளோம். இதன் போது இன, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், எமது குரல்கள் ஓங்கி ஒலிக்கும்.


எமது ஆட்சிக்காலப்பகுதியில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு 0.50 வீத வரியே அறவிடப்பட்டிருந்தது. தற்போது 14 வீதமாக மாற்றப்பட்டுள்ளது.இது சிறிய அதிகரிப்பல்ல.இது மாணிக்க கல் வர்த்தகத்தை மேற்கொள்வோரை மிகக் கடுமையாக பாதிக்கும். இவ் வர்த்தகத்தை இலங்கை முஸ்லிம்களே அதிகம் மேற்கொள்கின்றனர். இது முஸ்லிம்களின் பொருளாதரத்தில் பெரும் எதிர் தாக்கம் செலுத்தும். 

இவ் ஆட்சி அமையப்பெறுவதற்கு முன்பு, ஆட்சியை கைப்பற்றுவதற்கான தேர்தல் பிரச்சார கூட்டங்களில், பேருவளை போன்ற பகுதிகளில் அமைச்சர் ராஜிதவால்,மாணிக்க கல் வர்த்தகத்தை மேம்படுத்த  பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டுமிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போது நடைபெறுகின்றவற்றை பார்க்கின்ற போது, அவர்கள் சொன்னதுக்கு மாற்றமாகவே, அனைத்தையும்செய்து வருகிறார்கள். இவ் ஆட்சியை நல்லாட்சியாக மாற்றப்போவதாக கூறினார்கள். தற்போது நடைபெறுவது என்ன நல்லாட்சியா?, அனைத்தும் அப்படித்தான். 

இவ் வர்த்தகத்தில் களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் மிக ஈடுபாடு கொண்டவர்கள். எமது ஆட்சிக் காலப்பகுதியில் மாணிக்க கல் வர்த்தகத்தை மேற் கொள்வதற்கு எந்த சிரமமுமிருக்கவில்லை.இதனை பார்த்த ஐக்கிய தேசிய கட்சியுடன் பிணைக்கப்பட்டிருந்த அப் பகுதி மக்கள், அவர்களை கை கழுவி, எம்முடன் கை கோர்த்திருந்தனர். இவர்களை எம்மிடமிருந்து பிரிப்பதை நோக்காக கொண்டும் தான், அளுத்கமை கலவரம் ஈடுபட்டிருந்தது என்ற உண்மையையும் இவ்விடத்தில் கூறுவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன் என குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment