இலங்கை ஊடகவியலாளர்கள் குழு சீனா விஜயம் - sonakar.com

Post Top Ad

Monday 9 April 2018

இலங்கை ஊடகவியலாளர்கள் குழு சீனா விஜயம்


பிரபல ஊடகவியலாளரும் கெப்பிட்டல் வானொலியின் நிலைய பிரதானியுமான ஷியாவுல் ஹஸன் தலைமையில் 12 பேர் அடங்கிய ஊடகவியலாளர் குழு எதிர்வரும் புதன் கிழமை சீனா செல்கிறது. 

சீனாவின் தலை நகர் பெய்ஜிங்கில் ஏப்ரல் 12 தொடக்கம் மே 3 வரை நடைபெறவுள்ள ஊடகச்செயலமர்வில் பங்கு பற்றுவதற்காகவே இக்குழு சீனா செல்கின்றது.


சீனா மக்கள் குடியரசின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, வானொலி சேவை மற்றும் ஆராய்ச்சி நிர்வாகமே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பயிற்சிப் பட்டறையில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி ,வசந்தம் தொலைக்காட்சி, சிரச தொலைக்காட்சி , இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ,கெப்பிட்டல் வானொலி  ஆகிய இலத்திரனியல் ஊடகங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களே பங்கு கொள்கின்றனர். இந்த செயலமர்வில் பங்கு பற்றும் ஊடகவியலாளர்களில் 4 பேர் தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-சிமாரா அலி

No comments:

Post a Comment