முஸ்லிம்கள் பின்னால் 'ஓடிய' மஹிந்த: பொன்சேகா! - sonakar.com

Post Top Ad

Thursday, 5 April 2018

முஸ்லிம்கள் பின்னால் 'ஓடிய' மஹிந்த: பொன்சேகா!


நம்பிக்கையில்லா பிரேரணையின் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற மஹிந்த ராஜபக்ச அவர்களின் பின்னால் ஓடுவதைத் தான் கண்டதாக நேற்றைய தினம் சபையில் தெரிவித்திருந்தார் அமைச்சர் சரத் பொன்சேகா.


கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் இதுவரை பெரமுனயைச் சேர்ந்த மூன்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் மூவர் கைது செய்யப்படவுள்ளதாகவும் இதன் போது அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கண்டி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய ஐக்கியத்தைப் பற்றி மஹிந்த தரப்பு பேச வருவது வேடிக்கையானது எனவும் தற்போது காலம் கடந்து முஸ்லிம்களின் பின்னால் மஹிந்த ஓடுவதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment