லண்டனை உலுக்கும் தொடர் கொலைகள்; 50 பேர் பலி! - sonakar.com

Post Top Ad

Thursday 5 April 2018

லண்டனை உலுக்கும் தொடர் கொலைகள்; 50 பேர் பலி!


லண்டன் நகரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைகளின் பின்னணியில் நேற்றிரவு கிழக்கு லண்டன் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான 18 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நகரில் மேலும் ஒரு இடத்தில் தாக்குதலுக்குள்ளாகி 53 வயது நபர் ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில் 2018ம் ஆண்டு இதுவரை 50 கொலைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்து மற்றும் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் கிழக்கு ஐரோப்பிய, ரஷ்ய பாதாள உலக குழுக்கள் இயங்குவதாக கிழக்கு லண்டனைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் லமி சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை 2000 ஆண்டுகளின் ஆரம்ப காலத்தில் இலங்கை தமிழ் சமூகத்தில் இவ்வாறான தொடர் அடிதடி, கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment