சிங்கள புத்தாண்டையடுத்து நிகழும் சம்பிரதாயபூர்வ எண்ணை தடவல் நிகழ்வில் தற்போது லண்டன் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்குள்ள விகாரையில் கலந்து கொண்டுள்ள அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொலன்நறுவயில் கலந்து கொண்டுள்ளார்.
பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டுக்காக தற்போது லண்டன் விஜயம் செய்துள்ள மைத்ரிபால சிறிசேன அங்கு இருக்கும் பிரதான பௌத்த விகாரையில் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
நாடாளுமன்றின் அடுத்த தவணை மே மாதமே ஆரம்பிக்கவுள்ள நிலையில் தற்போது இரு தரப்பும் தமது அணிகளை பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. இந்நிலையில் ஜனாதிபதி தற்போது வெளிநாடு சென்றுள்ளமையும் மஹிந்த ராஜபக்ச களப் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment