
சதொச நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்ட கரம் போர்ட் விவகாரத்தில் தான் எந்த வகையிலும் பொறுப்பாளியாகப் போவதில்லையெனவும் தமக்கெதிராக அரசியல் பழி வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.
அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளின் பின்னணியில் இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைக்கு அழைக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும், தனது கடவுச்சீட்டு உயர் நீதிமன்றில் இருக்கிறது என்பதை நிரூபிக்கத் தவறிய நிலையில் பிணை விதிகளை நிறைவேற்றாததன் அடிப்படையில் கையில் பையோடு தயாராகவே வந்த அவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment