
நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சரவை மாற்றம் தொடர்பில் இன்று பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிகொள்ளப்பட்டதையடுத்து அமைச்சரவை முழு அளவில் மாற்றப்படும் எனவும் புதிய அரசு உருவாகும் எனவும் அவ்வப்போது கருத்து வெளியிடப்பட்டு வருகிறது.
எனினும், வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பியுள்ள நிலையில் இதன் பின்னரே அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி முடிவை அறிவித்தாலேயே சு.க அரசை விட்டு விலகும் எனவும் எஸ்.பி. திசாநாயக்க தற்போது தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment