
கடந்த ஜனவரி 20ம் திகதி கதிர்காமம் பொலிஸ் நிலையத்தைத் தாக்கிய விவகாரத்தில் நீதிமன்றில் சரணடைந்த கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் சானக அமில ரங்கன உட்பட மூவருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் குறித்த நபர்கள் எதிர்வரும் மே 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றதைக் காரணங் காட்டி பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் அதனை எதிர்த்து பொது மக்கள் பிரவொன்று பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்தியிருந்தது.
இந்நிலையில், சிசிடிவி பதிவுகளை பரீட்சித்த பொலிசார் பிரதேச சபை தலைவர் உட்பட மூவரைத் தேடி வந்த நிலையில் குறித்த நபர்கள் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment