ஹரீஸ் - ரிசாதுக்கு எதிராக நற்பிட்டிமுனையில் ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Friday 6 April 2018

ஹரீஸ் - ரிசாதுக்கு எதிராக நற்பிட்டிமுனையில் ஆர்ப்பாட்டம்கல்முனை மா நகர சபை பிரதி மேயரை தங்களுக்கு கிடைக்க விடாமல்  தடுத்ததாக  பிரதியமைச்சர் எச் எம் எம்  ஹரீசுக்கு எதிராகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிசாத் பதியுதீனின் செயற்பாடுகளை கண்டித்தும் இன்று நற்பிட்டி முனையில் ஏட்டிக்குப் போட்டியான இரு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.இன்று(6)   ஜும்மா தொழுகைக்கு பின்னர் பள்ளிவாசலின் முன்னால் ஒன்று கூடிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் ஹரீசுக்கு எதிராகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ரிசாத் பதியுதீனுக்கு எதிராகவும் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் கோசங்களை எழுப்பியிருந்தனர்.


கல்முனை பிரதிமேயராக முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் காத்தமுத்து கணேஸ் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

No comments:

Post a Comment