
கியுப புரட்சியாளர் பிடல் கஸ்ட்ரோவின் மறைவின் பின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து வந்த அவரது சகோதரர் ராவுல் கஸ்ட்ரோ புதிய தலைவர் ஒருவருக்கு வழிவிட்டு ஒதுங்குகிறார்.
புதிய தலைவராக மிகுவேல் டயஸ் கனல் தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் தனது கடமையைப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், முதலாளித்துவத்துக்கு தமது நாட்டில் இடமில்லையென டயஸ் கனல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கியுப தொடர்ந்தும் கம்யுனிச கொள்கையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment